மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம்: 2 பேர் கைது
மதுரையில் மின்மோட்டாரை பழுதுபார்க்க கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 3 பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை,
மதுரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது விஷவாயு தாக்கி 3 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக VGR என்ற தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் ஆனந்த், ஊழியர்கள் ரமேஷ், லோகநாதன் ஆகியோர் மீது எம்.எஸ் காலணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஊழியர்கள் ரமேஷ், லோகநாதன் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
மேலும் ஒப்பந்த உரிமையாளர் விஜய் ஆனந்த் சென்னையில் தலைமறைவாகி உள்ளதாகவும் ஒப்பந்த உரிமையாளரை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உரிமையாளர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story