சசிகலாவிடம் 2-வது நாளாக நடைபெற்று வந்த விசாரணை நிறைவு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக வி.கே.சசிகலாவிடம் 2-வது நாளாக நடைபெற்று வந்த விசாரணை நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் நேற்று 5½ மணி நேரம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்தநிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் விசாரணையை நிறைவு செய்தது தனிப்படை போலீஸ். மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை துருவி துருவி கேள்வி கேட்டு வாக்குமூலம் பெற்றது.
நேற்று 5½ மமணி நேரம் விசாரணை நடந்த நிலையில் இன்று 4 மணி நேரம் தனிப்படை விசாரித்துள்ளது. வழக்கு தொடர்பாக சென்னை தி.நகர் வீட்டில் 2-வது நாளாக சசிகலாவிடம் 10 மணி நேரம் விசாரணை நடந்தது.
Related Tags :
Next Story