வி.கே.ச‌சிகலாவிடம் 4 மணி நேரமாக போலீசார் விசாரணை: கூறியது என்ன? வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் பேட்டி


வி.கே.ச‌சிகலாவிடம் 4 மணி நேரமாக போலீசார் விசாரணை: கூறியது என்ன? வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 22 April 2022 3:55 PM IST (Updated: 22 April 2022 3:55 PM IST)
t-max-icont-min-icon

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் எந்தவித தயக்கமும் இன்றி, சசிகலா பதிலளித்துள்ளார் என வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் கூறினார்.

சென்னை,

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம்  நேற்று 5½ மணி நேரம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டன. 

இந்தநிலையில்,  கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் விசாரணையை நிறைவு செய்தது தனிப்படை போலீஸ். மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை துருவி துருவி கேள்வி கேட்டு வாக்குமூலம் பெற்றது.

நேற்று 5½ மமணி நேரம் விசாரணை நடந்த நிலையில் இன்று 4 மணி நேரம் தனிப்படை விசாரித்துள்ளது. வழக்கு தொடர்பாக சென்னை தி.நகர் வீட்டில் 2-வது நாளாக சசிகலாவிடம் 10 மணி நேரம் விசாரணை நடந்தது.

இந்தநிலையில்,  சசிகலாவிடம் நடத்திய விசாரணையில் காவல்துறையினருக்கு முழு திருப்தி கிடைத்துள்ளது.  கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் எந்தவித தயக்கமும் இன்றி, சசிகலா பதிலளித்துள்ளார். கொடநாடு பங்களாவை புதுப்பிக்கவும், அங்கு செல்லவும் சசிகலாவுக்கு தடை இல்லை. சசிகலாவிடம் விசாரணை முறையாக நடைபெற்றது என  வி.கே.ச‌சிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் கூறினார். 

Next Story