குளத்தில் மூழ்கி அக்கா-தம்பி உயிரிழந்த சோகம்...!
உளுந்தூர்பேட்டை அருகே குளத்தில் மூழ்கி அக்கா-தம்பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரிய ஓடப்பன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் கூலித்தொழிலாளி.
இவரது மகள் அனிஷா(13) மகன் சுரேஷ்(10) இருவரும் வீட்டின் அருகே ஆடு மேய்க்க சென்றுள்ளனர்.
அப்போது அருகில் உள்ள குளத்திற்கு சென்ற தம்பி சுரேஷ் எதிர் பாராதவிதமாக நீரில் மூழ்கி உள்ளார். பின்னர், அவரை காப்பாற்றுவதற்காக அக்கா அனிஷா குளத்துக்குள் இறங்கி உள்ளார். இதில் இருவரும் நீரில் மூழ்கி உள்ளனர்.
இதனை அறிந்த அப்பகுதியினர் சிறுவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள முத்தாண்டிகுப்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story