கிணற்றில் தவறி விழுந்த 85 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு...!


கிணற்றில் தவறி விழுந்த 85 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு...!
x
தினத்தந்தி 22 April 2022 7:45 PM IST (Updated: 22 April 2022 7:36 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே 80 அடி அழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள குள்ளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயி ராமசாமி. இவரது தாயார் பாவாயி (வயது 85). 

மூதாட்டி பாவாயி அங்குள்ள விவசாய கிணற்றில் இன்று காலை தவறி விழுந்தார். சுமார் 80 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 20 அடி ஆழத்திற்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. அதனால் பாவாயிக்கு நீச்சல் தெரிந்த போதிலும், அவரால் மேலே ஏறி வர முடியவில்லை.

இதனால் மூதாட்டி பாவாயி‌ கூச்சலிட்டபடி கிணற்றில் தத்தளித்துக் கொண்டு இருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூதாட்டி பாவாயி கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார். 

பின்னர் மூதாட்டி பாவாயி சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



Next Story