"ஆட்டிசம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்" - ஆளுநர் ஆர்.என். ரவி


ஆட்டிசம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் - ஆளுநர் ஆர்.என். ரவி
x
தினத்தந்தி 22 April 2022 10:06 PM IST (Updated: 22 April 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

ஆட்டிசம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை,

ஆட்டிசம் பிரச்சனைக்கு முன்னேறிய அறிவியல் தொழில்நுட்பத்துடன் தீர்வு காண வேண்டியது அவசியம் என்று  தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஆட்டிசம் குறித்து நடைபெற்ற மாநாட்டில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். 

அப்போது பேசிய அவர், இந்தியாவில் 1 கோடி பேர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை கவனிக்கும் பெற்றோருக்கு பயிற்சியும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

Next Story