காவல்துறைக்கு 29 புதிய வாகனங்கள்


காவல்துறைக்கு 29 புதிய வாகனங்கள்
x
தினத்தந்தி 22 April 2022 6:24 PM GMT (Updated: 2022-04-22T23:54:03+05:30)

காவல்துறைக்கு 29 புதிய வாகனங்கள் அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்

புதுச்சேரி காவல்துறையை நவீனமாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ரூ.3 கோடியே 72 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய மினிபஸ், சொகுசு கார்கள் என 29 வாகனங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக 14 வாகனங்கள் இன்று வந்து சேர்ந்தது.
இந்த வாகனங்களை காவல்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று காலை காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு வாகனங்களை போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்த மோகனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் போலீஸ் ஐ.ஜி. சந்திரன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story