கொரோனா கால கற்றல் இழப்பை சரி செய்யவே இல்லம் தேடி கல்வி திட்டம் - முதல்-அமைச்சர் பேச்சு
கொரோனா கால கற்றல் இழப்பை சரிசெய்யவே இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டது என்று எவர்வின் பள்ளி ஆண்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
சென்னை கொளத்தூரில் எவர்வின் பள்ளி குழுமத்தின் 30-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதன்மை நிர்வாக அதிகாரி மகேஸ்வரி, நிறுவனர்-தாளாளர் புருஷோத்தமன் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளியின் இயக்குனர்கள் வித்யா, முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். விழாவில் அவர், பள்ளியின் 30-வது ஆண்டு விழா நினைவு கல்வெட்டை திறந்து வைத்தார். பள்ளியின் முதல்வர்கள், மூத்த ஆசிரியர்கள் மற்றும் படிப்பு, விளையாட்டு உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்கும் 18 மாணவ-மாணவிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.
எவர்வின் பள்ளி அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு பத்திரிகை போட்டோகிராபர்கள் குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார். மேலும் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.
மு.க.ஸ்டாலின் பேச்சு
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நான் முதல்-அமைச்சராக பதவியேற்று அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி ஓராண்டு ஆகப்போகிறது. இந்த ஓராண்டு எப்படி போனது என்று தெரியவில்லை. ஏனென்றால் நேரம் காலம் பார்க்காமல் தூக்கம், உணவு, ஓய்வு என்று அனைத்தையும் மறந்து, நான் மட்டும் இல்லை என்னை சார்ந்திருக்கும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் எல்லோரும் இப்படி பணியாற்றி கொண்டிருக்கும் காரணத்தால்தான் இன்றைக்கு தமிழ்நாடு எல்லா மாநிலங்களிலும் பேசக்கூடிய அளவுக்கு வளர்ந்து வந்துக் கொண்டிருக்கிறது.
முதல்-அமைச்சருக்கு எல்லாம் முதல்-அமைச்சர் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இது எனக்கு பெருமை, மகிழ்ச்சிதான். எனக்கு மட்டுமில்லை என்னை இந்த பொறுப்பில் தேர்ந்தெடுத்து அமர வைத்திருக்க கூடிய உங்களுக்கும் பெருமைதான்.
ஓட்டு போடாதவர்கள்...
இந்த கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக நான் வெற்றி பெற்று சான்றிதழை பெற்று அதை கருணாநிதி ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிற நினைவிடத்துக்கு சென்று அங்கே வைத்து நான் வாழ்த்துகளை பெற்றேன்.
அங்கு பத்திரிகையாளர்களிடம் நான் பேசும்போது, ‘என்ன உங்கள் திட்டம் என்று கேட்டார்கள். நான் ஒரே வரியில் சொன்னேன். எனக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டும் இல்லை. ஓட்டு போடாத மக்களுக்கும் சேர்த்து நான் பணியாற்ற போகிறேன்’ என்று சொன்னேன். ஓட்டு போட்டவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஓட்டு போடாதவர்கள் இப்படிபட்டவருக்கு ஓட்டு போடாமல் விட்டுவிட்டோமே? என்று வருத்தப்பட வேண்டும் என்ற நிலையை நான் நிச்சயம் நிறைவேற்றி காட்டுவேன் என்று நான் அன்றைக்கு உறுதி எடுத்துக்கொண்டேன். அதைதான் தொடர்ந்து நிறைவேற்றுகிற முயற்சியில் நான் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன்.
சமத்துவ சிந்தனை
கொரோனா கால பொதுமுடக்கம், கட்டுப்பாடு காரணமாக கற்றல் இழப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்ய இல்லம் தேடி கல்வி திட்டத்தை அறிவித்து, அதை வெற்றிக்கரமாக செயல்படுத்தி வருகிறோம். ‘நான் முதல்வன்’ என்ற புதுமையான திட்டத்தை நான் தொடங்கி வைத்திருக்கிறேன்.
பள்ளி பருவம் என்பது புத்தகங்களோடு அடங்கி விடாமல், எல்லா திசைகளிலும் இருக்கக்கூடியவற்றை கற்கக்கூடியதாக அமையவேண்டும். எந்தவிதமான அழுத்தங்களும் இல்லாமல் இருக்கக்கூடிய காலக்கட்டமாக அமைய வேண்டும். கற்றல் என்பது மகிழ்ச்சியோடு ஈடுபடக்கூடிய செயல்பாடாக மாறட்டும். நல்ல நோக்கமிக்கதாக ஊரும், மாநிலமும், நாடும் திகழ பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து சமத்துவ சிந்தனையை வளர்க்கும் தூதுவர்களாக மாறவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர்கள் பங்கேற்பு
இந்த விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தி.மு.க. எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி, தி.மு.க. எம்.எல்.ஏ. தாயகம் கவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நானும் மாணவன் தான்... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகலப்பு பேச்சு
கொளத்தூர் பள்ளி ஆண்டு விழாவை மாணவ-மாணவிகள் ஆரவாரமின்றி அமைதியான முறையில் கண்டுகளித்தனர். இந்த செயல்பாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி பேசினார். அவர் பேசியதாவது:-
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என்ன ஆச்சரியம் என்றால், இங்கே குழுமியிருக்கும் குழந்தைகள் இவ்வளவு கட்டுப்பாடாக, அமைதியாக இருக்க கூடிய காட்சியை பார்கிறபோது இந்த பள்ளி நிர்வாகம் எந்தளவுக்கு கட்டுப்பாடுடன் இருக்கிறது. கண்ணியத்தை கடைபிடிக்கிறது என்பதை எண்ணி பார்க்கிறபோது நான் வியந்து நிற்கிறேன்.
நானும் உங்களை போன்று மாணவனாக இருந்தவன் தான். இப்போது பார்த்தால் வயதுதான் அதிகமாகி இருக்கிறதே தவிர, உருவத்தை பார்த்தால் நானும் ஒரு மாணவனாகத்தான் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது உங்களை பார்க்கிறபோது இன்னும் 10 வயது குறைந்துவிட்டது போன்றுதான் உங்கள் முன்பு நின்று கொண்டிருக்கிறேன்.
நான் பள்ளி, கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்தபோது இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது உண்டு. ஆனால் இவ்வளவு கூட்டம் இருக்காது. 500 பேருக்குள் தான் இருக்கும். சிறப்பு விருந்தினர்களை பேச விடாமல் திருப்பி அனுப்பி வைத்த சம்பவங்கள் எனக்கு நினைவுக்கு வருகிறது. அதுபோன்று எனக்கு நிச்சயம் நடக்காது என்பது எனக்கு தெரியும். அது அந்த காலம். இப்போது நிலைமை மாறி மாணவ-மாணவிகளிடம் கட்டுப்பாடு இருக்கிறது என்பதை எண்ணி பார்க்கிறபோது இது எனக்கு பெருமை தரக்கூடிய நிகழ்ச்சியாக அமைந்து இருக்கிறது.

Related Tags :
Next Story