நெல்லையில் தாக்கப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் நலம் விசாரித்தார் முதல் அமைச்சர்


நெல்லையில் தாக்கப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் நலம் விசாரித்தார் முதல் அமைச்சர்
x
தினத்தந்தி 23 April 2022 12:03 PM IST (Updated: 23 April 2022 12:03 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ. மார்கரெட் தெரசாவிடம் தொலைபேசியில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

சென்னை,

நெல்லையில் தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ. மார்கரெட் தெரசாவிடம் தொலைபேசியில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நலம் விசாரித்தார்.  இது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

 திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சகோதரி மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். 


Next Story