தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவ பெண்கள் சாலை மறியல்...!
தூத்தூரில் தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவ பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
குமரி,
குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தில் ஏராளமான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வீடுகள் கடல் அலை அரிப்பால் சேதம் அடைந்து வருவதாக பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளதாக கூறுப்படுகின்றது.
இந்த நிலையில் அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த மீனவ கிராம பெண்கள் தீடீர் என்று சாலை மறியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
கடல் அரிப்பால் வீடுகள் கடுமையாக சேதம் அடைந்து வருகின்றது. இதுகுறித்து புகார் மனு அளித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. இதனால் கடல் அரிப்பில் இருந்த பாதுகாக்க தூண்டில் வளைவு மற்றும் அலை தடுப்பு சுவர் அமைத்து தரக்கோரி போராட்டம் நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story