உலக புத்தக தினத்தையொட்டி நவதானியங்களால் ஆன திருவள்ளுவர் ஓவியம்


உலக புத்தக தினத்தையொட்டி நவதானியங்களால் ஆன திருவள்ளுவர்  ஓவியம்
x
தினத்தந்தி 23 April 2022 7:50 PM IST (Updated: 23 April 2022 7:50 PM IST)
t-max-icont-min-icon

உலக புத்தக தினத்தையொட்டி நவதானியங்களால் ஆன திருவள்ளுவர் உருவப்படத்தை மாணவர்கள் வண்ணமயமாக வரைந்தனர்

காரைக்கால்
காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் உள்ள திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக புத்தக தினவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளியின் நூலகத்தில் உளுந்து, பயறு, கொண்ைடக்கடலை, வேர்க்கடலை, மொச்சை உள்ளிட்ட நவதானியங்களால் 20 அடி நீளம், 20 அடி அகலத்தில் பள்ளி மாணவர்கள் திருவள்ளுவர் உருவப்படத்தை வண்ணமயமாக வரைந்தனர். நிகழ்ச்சிக்கு பள்ளியின் துணை முதல்வர் அசோகன் தலைமை தாங்கினார்.
மாவட்ட பள்ளி கல்வித்துறை துணை இயக்குனர் ராஜேஸ்வரி, திருவள்ளுவரின் நவதானிய ஓவியத்தை பார்வையிட்டு, மாணவர்களை பாராட்டினார்.

Next Story