108 பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்


108 பஞ்சாயத்துகளில்  சிறப்பு கிராம சபை கூட்டம்
x

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி புதுச்சேரியில் 108 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் இன்று நடக்கிறது.

புதுச்சேரி
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி புதுச்சேரியில் 108 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் இன்று நடக்கிறது.

பஞ்சாயத்துராஜ் தினம்

தேசிய பஞ்சாயத்துராஜ் தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த உள்ளாட்சித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக புதுவை உள்ளாட்சித்துறை துணை இயக்குனர் கிட்டி பலராம் விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

108 கிராம பஞ்சாயத்துகள்

புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள 108 கிராம பஞ்சாயத்துகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்களை இன்று நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் பிரச்சினைகளை விவாதித்து 2 தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.
அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்களும் சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூட்டம் தொடர்பான விவரங்களை ஆன்லைனிலும் பதிவேற்றம் செய்யவேண்டும். மேலும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை தாக்கல் செய்யவேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story