நெல்லை: ஏ.டி.எம் எந்திரத்தில் கொள்ளை முயற்சி - வடமாநிலத்தவர் 3 பேர் கைது...!


நெல்லை: ஏ.டி.எம் எந்திரத்தில் கொள்ளை முயற்சி - வடமாநிலத்தவர் 3 பேர் கைது...!
x
தினத்தந்தி 23 April 2022 10:00 PM IST (Updated: 23 April 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

கூடங்குளத்தில் ஏ.டி.எம் எந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற வடமாநில தொழிலாளர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூடங்குளம்,

நெல்லை மாவட்டம் கூடங்குளதில் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த இரண்டு  நாட்களுக்கு முன்பு வடமாநில தொழிலாளர்கள் லக்விந்தேர் பால்சிங் (வயது35), ரஞ்சித் சிங்(30) விஷால் (19) ஆகிய  3 பேரும் கூடங்குளம் போலீஸ் நிலையத்திற்கு அருகே உள்ள கனரா வங்கியின் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்று உள்ளனர். 

அப்போது ஏடிஎம் எந்திரத்தில் எச்சரிக்கை ஒலி வந்து உள்ளது. இதனால் 3 கொள்ளையர்களும் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் 3 பேரையும் கைது செய்து உள்ளனர்.




Next Story