மது குடித்த ஓட்டல் தொழிலாளி உள்பட 2 பேர் சாவு


மது குடித்த ஓட்டல் தொழிலாளி உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 23 April 2022 10:40 PM IST (Updated: 23 April 2022 10:40 PM IST)
t-max-icont-min-icon

தனித்தனி சம்பவத்தில் மது குடித்த ஓட்டல் தொழிலாளி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

தனித்தனி சம்பவத்தில் மது குடித்த ஓட்டல் தொழிலாளி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

ஓட்டல் தொழிலாளி

உருளையன்பேட்டை ராஜீவ்காந்தி நகர் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி யமுனா (38). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இன்று முன்தினம் கண்ணன் அளவுக்கு அதிகமாக மதுகுடித்துவிட்டு புதுவை காமராஜர் சாலையில் உள்ள மாநில கூட்டுறவு வங்கி அருகே மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 
இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெயிண்டர்

உழவர்கரை வயல்வெளி நகரை சேர்ந்தவர் கிறிஸ்டியான் (36). பெயிண்டர். இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் திடீரென சுருண்டு விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story