சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என கவர்னர் தமிழிசை தலைமையில் நடந்த மேலாண்மை குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என கவர்னர் தமிழிசை தலைமையில் நடந்த மேலாண்மை குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கொரோனா பரவல்
கொரோனா தொற்று மீண்டும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் புதுவை மாநில கொரோனா மேலாண்மை குழு கூட்டம் கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
இதில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆனந்த் மோகன், சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி டாக்டர் சாய்ரா பானு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
சுகாதார கட்டமைப்பு
கூட்டத்தில், புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவது, மருந்து, தடுப்பூசி உள்ளிட்டவைகளை தயார் நிலையில் வைத்திருப்பது, காலியாக உள்ள பணியிடங்களை அவசரகால தேவை கருதி நிரப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும், கூட்டு நடவடிக்கை குழுக்கள் அமைத்தல், கோவிட் வழிமுறைகளை நடைமுறைப்படுத்துதல், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ரெயில், விமானம், பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் உடல் வெப்பநிலை பரிசோதனை மையங்கள் அமைப்பது, தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்துவது, குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்துதல், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Related Tags :
Next Story