திருச்சி: வைரிசெட்டிப்பாளையத்தில் மீன்பிடி திருவிழா...!
திருச்சி அருகே வைரிசெட்டிப்பாளையத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
உப்பிலியபுரம்,
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே வைரிசெட்டிப்பாளையம் ஜம்பேரியில் மீன்பிடி திருவிழா இன்று காலை நடைபெற்றது.
சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு கொல்லிமலை அய்யாறு நீராதாரமாக உள்ளது. அய்யாற்றில் நீர் வரத்து குறைந்து பாசனத்திற்கு திருப்பி விடப்பட்டதால், ஏரிக்கு வரும் நீர் தடைபட்டது. ஏரி வறண்டு போகும் நிலையில் இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக மீன்பிடி திருவிழா ஊராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் இன்று காலை 8 மணிக்கு மீன்பிடி திருவிழா துவக்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாலை 5 மணிக்கே மீன்பிடி வலைகளுடன் திரண்டு சென்ற சுற்றுவட்டார பொதுமக்கள் காத்திருக்காமல் மீன்களை பிடிக்க தொடங்கினர்.
இதனால் துறையூர், தம்மம்பட்டி, தாத்தையங்கார்பேட்டை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story