ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசாவை சந்தித்து நலம் விசாரித்தார் டிஜிபி
நெல்லையில் தாக்கப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் டிஜிபி சைலேந்திரபாபு .
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் மார்க்ரெட் தெரசா (வயது 29). இவர் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் நெல்லையை அடுத்த பழவூரில் உச்சினி மாகாளியம்மன் கோவில் கொடை விழா நடந்தது, இதில் சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நள்ளிரவு 1 மணியளவில் அங்கு பழவூர் பால் பண்ணை தெருவை சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவர் திடீரென சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசாவை சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஆறுமுகம் மீது சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசாவை கத்தியால் குத்தியது தெரியவந்து உள்ளது.
கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த மார்க்ரெட் தெரசாவை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசாவை டிஜிபி சைலேந்திரபாபு,நேரில் சந்தித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்த அவர், சப் இன்ஸ்பெக்டரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
Related Tags :
Next Story