சென்னை ஐ.ஐ.டியில் 20 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


சென்னை ஐ.ஐ.டியில் 20 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 24 April 2022 12:59 PM IST (Updated: 24 April 2022 12:59 PM IST)
t-max-icont-min-icon

பாதிக்கப்பட்ட 40 மாணவர்களுக்கு தொற்று இல்லாத நிலை உறுதியாகி உள்ளது.தற்போது 20 பேருக்கு மட்டுமே மிதமான தொற்று பதிப்பு உள்ளது.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் 60 பேருக்கு கொரோன தொற்று உறுதியான நிலையில், இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன்  மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

அந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை ஐ.ஐ.டி வளாகத்தில் 2,015 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 60 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 19ம் தேதி முதல் இன்று வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆக உள்ளது. அதாவது 2.18 சதவீதம் தொற்று எண்ணிக்கை இருக்கிறது.

பாதிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களில், பாதிக்கப்பட்ட40 மாணவர்களுக்கு தொற்று இல்லாத நிலை உறுதியாகி உள்ளது.

தற்போது 20 பேருக்கு மட்டுமே மிதமான தொற்று பதிப்பு உள்ளது. எனவே யாரும் பதட்டம் கொள்ள தேவையில்லை.

மருத்துவத்துறை செயலாளர்  அறிவுரையை ஏற்று வளாகத்தில் அனைவரும் 100 சதவீதம் முகக்கவசம் அணிந்துள்ளனர்.இதனால் நேற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக குறைந்துள்ளது.

முதல் அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில், தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் மே-8ம் தேதி நடைபெற உள்ளது.

ஒரே நாளில் 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுவது இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான்.

இதுவரை, தமிழகத்தில் சுமார் 54 லட்சம் பேர் முதல் தவணை (தடுப்பூசி போட்டு கொள்ளாமல் இருப்பவர்கள்) தடுப்பூசியும், 1 கோடியே 46 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட வேண்டியிருக்கிறது. இதனால் ஏறத்தாழ 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. அவர்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாளை காலை 9 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில்,  தலைமைச்செயலாளர், மருத்துவத்துறை செயலாளர், அதிகாரிகளுடன் முதல் அமைச்சர்  ஆலோசனை மேற்கொள்கிறார். 

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story