செயற்கையாக மின்வெட்டு ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் பி.மூர்த்தி
செயற்கையாக மின்வெட்டு ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் பி. மூர்த்தி கூறியுள்ளார்.
மதுரை,
அரசியல் காரணத்திற்காக மின்வெட்டு குறித்து எதிர்கட்சியினர் பேசி வருவதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருக்கிறார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக ஆட்சியில் 60 முறைக்கு மேலாக மின்வெட்டு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, மக்கள் மத்தியில் மின்வெட்டு இல்லாத நிலையை ஏற்படுத்த முதல்வரும் அமைச்சரும் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். செயற்கையாக மின்வெட்டை ஏற்படுத்த வேண்டிய காரணம் இல்லை.
எதிர்கட்சியினர் செயற்கையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் காரணத்திற்காக அவர்கள் கூறுகிறார்கள். அது உண்மையில்லை என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story