தக்காளி விலை தொடர்ந்து அதிகரிப்பு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி


தக்காளி விலை தொடர்ந்து அதிகரிப்பு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 24 April 2022 2:28 PM IST (Updated: 24 April 2022 2:28 PM IST)
t-max-icont-min-icon

தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போரூர், 

கோயம்பேடு மார்கெட்டுக்கு கர்நாடகா மாநிலம் குண்டுப்பள்ளி, கோலார் ஆந்திரா மாநிலம் பலமனேர், புங்கனூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது.  

இன்று 45 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ10-க்கு விற்ற தக்காளி தற்போது 5 மடங்கு அதிகரித்து ஒரு கிலோ தக்காளி ரூ50-க்கு விற்கப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ29-க்கும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ35-க்கும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

வரத்து குறைந்து வருவதால் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மொத்த விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ முதல் ரக தக்காளி ரூ40-க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story