மின்வெட்டு இல்லாத சூழலை அரசு உருவாக்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்


மின்வெட்டு இல்லாத சூழலை அரசு உருவாக்க வேண்டும்:  டாக்டர் அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 24 April 2022 6:00 PM IST (Updated: 24 April 2022 6:00 PM IST)
t-max-icont-min-icon

அரசுக்கும், கவர்னருக்கும் இடையே சுமுக உறவு இருந்தால்தான் தமிழ்நாட்டுக்கு நல்லது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.

சென்னை, 

அரசுக்கும், கவர்னருக்கும் இடையே சுமுக உறவு இருந்தால்தான் தமிழ்நாட்டுக்கு நல்லது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார். அன்புமணி ராமதஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது;-

மின்வெட்டு பிரச்சினை கடந்த 20 ஆண்டுகால பிரச்சினை. யார் ஆட்சிக்கு வந்தாலும், நாங்கள் மின் மிகை மாநிலமாக மாற்றுவோம் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் மின்மிகையாக மாற்றவில்லை. தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. 

இதற்கு நிலக்கரி பற்றாக்குறையும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து இருக்கவேண்டும். இப்போது மாணவர்களுக்கு தேர்வு காலம். பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள்.  மின்வெட்டு இருக்கக்கூடாது. எனவே அரசு மின்வெட்டு இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்.

அரசு, கவர்னர் இடையே சுமுகமான உறவு இருக்கவேண்டும். மக்கள் உணர்வு அடிப்படையில் தான் ஒரு அரசாங்கத்தை தேர்வு செய்கிறார்கள். அரசாங்கம் என்பது மக்களின் உணர்வு. தற்போது நீட் உள்பட பல்வேறு பிரச்சினைகளில் மக்களின் உணர்வை கவர்னர் புரிந்துகொள்ளவேண்டும். கவர்னரின் தேனீர் விருந்தையும் இந்த அரசு புறக்கணித்து இருக்கக்கூடாது. சுமுகமான உறவு இருந்தால் தான் தமிழ்நாட்டுக்கு நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story