சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து: அரசு அதிகாரி உள்பட 3 பேர் பலி
பெரம்பலூர் அருகே சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் அரசு அதிகாரி உள்பட 3 பேர் பலியானார்கள்.
பெரம்பலூர்,
திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்தவர் கமலகண்ணன் (வயது 42). திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லதா (40). இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் மாவட்ட கைப்பந்து பயிற்சியாளர் ஆவார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் கமலகண்ணன் மராட்டிய மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்வதற்காக சென்னையில் இருந்து ரெயில் மூலம் கோவிலுக்கு செல்வதற்காக நேற்று அதிகாலை தனது மனைவியுடன் காரில் சென்னைக்கு புறப்பட்டார்.
தூக்க கலக்கத்தில்...
இவர்களுடன் சேர்ந்து கோவிலுக்கு செல்வதற்காக கமலகண்ணனின் சித்தி கோவையை சேர்ந்த மணிமேகலை (64), லதாவின் தாய் திருவாரூர் மாவட்டம் இடைமேலையூரை சேர்ந்த வேம்பு (65), அண்ணன் ராமச்சந்திரன் (44) ஆகியோர் திருச்சியில் காருக்காக காத்து கொண்டிருந்தனர். அவர்களை திருச்சி வந்து கமலகண்ணன் காரில் ஏற்றிக்கொண்டு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.
அதிகாலை 4.45 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரம் அருகே வந்த போது தூக்க கலக்கத்தில் கமலகண்ணன் காரை ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையின் மைய தடுப்பு சுவரில் (சென்டர் மீடியன்) பயங்கரமாக மோதி ‘பல்டி' அடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
3 பேர் பலி
இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி படுகாயம் அடைந்த கமலகண்ணன், அவரது மனைவி லதா, லதாவின் தாய் வேம்பு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மணிமேகலை, லதாவின் அண்ணன் ராமச்சந்திரன் ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த மணிமேகலை, ராமச்சந்திரன் ஆகியோரை காரில் இருந்து மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Tags :
Next Story