எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 25 April 2022 10:07 AM IST (Updated: 25 April 2022 10:14 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை,

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆலோசனை மேற்கொண்டார். நாளை மறுநாள் பிரதமருடன், மாநில முதல் மந்திரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இன்று இந்த கூட்டம் நடைபெறுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்  ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கொண்டு காணொலி காட்சி மூலம் முதல் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும். பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.

தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்வது நம் முன் இருக்கும் சவால். தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 41.66 சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் காரணமாக ஏற்பட்ட 3-வது அலையின் தாக்கம் பெருமளவில் இல்லை. தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு குறைந்துள்ளது.

பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் குறைவாக உள்ளது.

91.5  சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 74.75 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் பல மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.


Next Story