வேலூர் ஆயுதப்படை போலீசார் பணியின் போது மாரடைப்பால் மரணம்...!


வேலூர் ஆயுதப்படை போலீசார் பணியின் போது மாரடைப்பால் மரணம்...!
x
தினத்தந்தி 25 April 2022 10:45 AM IST (Updated: 25 April 2022 10:39 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் ஆயுதப்படை போலீசார் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்து உள்ளார்.

வேலூர், 

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை சேர்ந்தவர் வானவர்மன் (வயது 35). இவர் கடந்த 2008-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார்.

வேலூர் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இவருக்கு சுமதி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

குடும்பத்துடன் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்துவந்தார். இன்று காலை வழக்கம் போல வானவர்மன் பணிக்கு சென்றார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை போலீசார் மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வானவர்மன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் போலீசார் திடீர் நெஞ்சுவலியால் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story