மின்கம்பத்தில் மோதி சாலையோரம் கவிழ்ந்து லாரி - டிரைவர் காயம்...!
திருவட்டார் அருகே மின்கம்பத்தில் மோதிய லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
திருவட்டார்,
குமரி மாவட்டத்தில் இருந்து சல்லி, எம்சாண்ட், என்சாண்ட், கல் போன்றவை கேராளவுக்கு லாரி மூலம் இரவு நேரங்களில் கொண்டு செல்லப்படுகின்றது. இந்த லாரிகள் சுருளோடு வழியாக பொன்மனை குலசேகரம் நெட்டா வழியாக கேரளாவுக்கு செல்கிறது.
இந்த வகையில் இன்று காலையில் சித்திரங்கோடு கல் குவாரியில் இருந்து அதிக அளவுக்கு பாரம் ஏற்றி வந்த கனரக வாகனம் சுருளோடு வழியாக செல்லந்துருத்தி பகுதியில் வரும் போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மின்கம்பம் இரண்டு துண்டாக உடைந்தது சேதம் அடைந்தது. ஆனால் லாரியின் டிரைவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.
தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்த டிரைவரை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story