நுரையீரல் உள்நோக்கும் அல்ட்ரா சவுண்டு பரிசோதனை தொடக்கம்


நுரையீரல் உள்நோக்கும் அல்ட்ரா சவுண்டு பரிசோதனை தொடக்கம்
x
தினத்தந்தி 25 April 2022 10:08 PM IST (Updated: 25 April 2022 10:08 PM IST)
t-max-icont-min-icon

மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் உள்நோக்கும் அல்ட்ரா சவுண்டு பரிசோதனை தொடக்க விழா நடந்தது.

மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் மாநிலத்தில் முதன் முறையாக நுரையீரல் சிறப்பு மருத்துவ பிரிவில் நுரையீரல் உள்நோக்கும் அல்ட்ரா சவுண்டு பரிசோதனை நடந்தது. இந்த சோதனையின் மூலம் நுரையீரல் உள்ளே திசுவினை அலட்ரா சவுண்டு மூலமாக பரிசோதித்து நோயின் தன்மையை கண்டறிய முடியும்.
நுரையீரல் உள்நோக்கும் அல்ட்ரா சவுண்டு பரிசோதனை  தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு மருத்துவமனையின் தலைவரும், மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நுரையீரல் பிரிவு டாக்டர் ஹரிகிஷான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 
விழாவில் துணைத்தலைவரும், முன்னாள் எம்.எல். ஏ.வுமான சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், இயக்குனர் ராஜ கோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, டீன் (அகாடமிக்) கார்த்திகேயன், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், நுரையீரல் சிறப்பு பிரிவு தலைவர் யுவ ராஜன் மற்றும் டாக்டர்கள், மருத்துவ      மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story