நுழைவுத் தேர்வு எப்படி திறமையான மருத்துவரை உருவாக்கும்? - மேயர் பிரியா


நுழைவுத் தேர்வு எப்படி திறமையான மருத்துவரை உருவாக்கும்? - மேயர் பிரியா
x
தினத்தந்தி 25 April 2022 10:56 PM IST (Updated: 25 April 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

நுழைவுத் தேர்வு எப்படி திறமையான மருத்துவரை உருவாக்கும் என்று சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

சென்னை, பெரியார் திடலில் தி.க மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்து கொண்டு உரையாற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் பணியாற்றும் 8 மருத்துவர்களில் ஒருவர் தமிழர் என்றும் இந்தியாவின் பணியாற்றும் ஒட்டுமொத்த மருத்துவர்களில் 12.5% பேர் தமிழர்கள் என கூறினார்.

மருத்துவப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வால் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன, ஆனால் நுழைவுத் தேர்வு எப்படி திறமையான மருத்துவரை உருவாக்கும்? என சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பினார்.

Next Story