தி.மு.க மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
வாக்களித்த மக்களுக்கு மின்தடைய தி.மு.க அரசு பரிசாக வழங்கி உள்ளது என்று முன்னாள் வருவாய்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளில் மின் மிகை மாநிலமாக தமிழகம் இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த 11 மாதத்தில் வாக்களித்த மக்களுக்கு மின்தடையை பரிசாக வழங்கி உள்ளது.
இதுகுறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் நாங்கள் பேசியபோது அதற்கு மின்சாரத்துறை அமைச்சர் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினார் ஆனால் தற்போது கோட்டைவிட்டார்.
இதுபோன்ற மக்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண பேசும் போதெல்லாம் அரசு தொடர்ந்து மெத்தன போக்கு காட்டி வருகின்றது. இந்த 11 மாத கால ஆட்சியில் திமுக அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story