அரசு பள்ளியில் விசிறி வீசி, நடனம் ஆட சொல்லி ராகிங் - வைரல் வீடியோ
சக மாணவர்கள் ராகிங் செய்வதாக ராகிங் என்ற வார்த்தையை மாணவர்கள் பயன்படுத்தி அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளனர்.
செங்கம்,
செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலர் சக மாணவர்களை அடித்து நடனமாட சொல்லியும், பாட்டு பாடி கொண்டு தங்களுக்கு விசிறி விட சொல்லியும் சக மாணவர்களை அடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. சக மாணவர்கள் ராகிங் செய்வதாக ராகிங் என்ற வார்த்தையை மாணவர்கள் பயன்படுத்தி அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளனர்.
கல்லூரிகளில் ராகிங் செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் ராகிங்கில் ஈடுபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சிலர் சக மாணவர்களை இதுபோன்று அடித்து துன்புறுத்தி வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சக மாணவர்களை அடித்து அச்சுறுத்தி தொந்தரவு செய்யும் மாணவர்களால் மற்ற மாணவர்கள் தொடர்ந்து தங்கள் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் போகும் சூழல் உள்ளது.
மேலும் இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுபோன்று செயல்களுக்கு பள்ளி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story