தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு


தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு
x

தமிழகத்தில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என அமைச்சர்செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

சென்னை,

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதமானது நடைபெற்று வருகிறது. இன்று தொழில்துறை, மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் மின்வெட்டு இருக்கிறது. நிலக்கரி பற்றாக்குறை இருந்தாலும், முதல்-அமைச்சரின்  பொற்கால ஆட்சியில் தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.

மின்துறை, தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாகவே செயல்படும், நலிவடைந்த மின் உற்பத்தி நிலையங்களை குறைந்த விலையில் வாங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். குறைவான திறன் உடையவை, அதிக திறனுள்ள மின் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும்.

தமிழகத்தில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும்.  தமிழகத்தில் விவசாய உற்பத்தியினை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள், சாலையோர துணை மின் நிலையங்களில் நிறுவப்படும்.  ரூ 1,649 கோடியில் 100 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story