டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்
சென்னை
டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் ரூ 2,200 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்க்கப்பட்டுள்ளது
2020-21ஆம் ஆண்டில் மொத்தமாக ரூ 33,811 கோடி டாஸ்மாக் மூலம் வருவாய் கிடைத்துள்ளது
அதன்படி நடப்பு ஆண்டில் மார்ச் மாதம் வரை மட்டும் ரூ 36,013 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு ரூ .500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட பேரவையில் தெரிவித்துள்ளார்
24,805 தொகுப்பு ஊதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதனால் ரூ 16.67 கோடி கூடுதல் செலவாகும் , மேலும் மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ 500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்
Related Tags :
Next Story