இ-ஸ்கூட்டர்: அடிக்கடி பழுது விரக்தியில் பெட்ரோல் ஊற்றி தீயிட்ட டாக்டர்


இ-ஸ்கூட்டர்: அடிக்கடி பழுது  விரக்தியில் பெட்ரோல் ஊற்றி தீயிட்ட டாக்டர்
x

ஆம்பூரில் அடிக்கடி பழுது மற்றும் மைலேஜ் கொடுக்காததால் இ-ஸ்கூட்டரை விரக்தியில் பெட்ரோல் ஊற்றி தீயிட்ட மருத்துவர்.

பேரணாம்பட்டு,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரைச் சேர்ந்தவர் பிசியோதெரபி மருத்துவர் பிரித்திவிராஜ். (40) இவர்  ஓலா நிறுவனத்தில் புதிய பேட்டரி இருசக்கர வாகனத்தை ரூ 1 லட்சத்து 50 ஆயிரம் சமீபத்தில் வாங்கியுள்ளார்.  இவர் புதிதாக வாங்கிய வாகனமானது  அடிக்கடி பழுது ஏற்பட்டு செல்லும் வழியில் பாதியிலேயே நின்றுள்ளது. அதனால்  பரித்திவிராஜ் மிகவும்  பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

மேலும் அவசர வேலையாக நீண்ட தூரம்  செல்லும் வழியில் பாதியிலேயே பேட்டரி இரு வாகனம் நின்று வழியில் செல்வோரிடம் உதவி கேட்டு பிறகு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறப்படுகிறது.  

இந்நிலையில் சம்பவத்தன்று  வாகன பதிவு எண் செய்வதற்காக  ஆம்பூரிலிருந்து குடியாத்தம் நோக்கி சென்றுள்ளார்.  பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி குருநாதபுரம் கிராமம் அருகில் சென்று கொண்டிருருந்த போது பேட்டரி இரு சக்கர வாகனமானது மீண்டும் பழைய படி  பழுது ஏற்பட்டு வாகனம் நின்றுவிட்டது.  

சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து நீண்ட நேரம் ஆகியும் நிறுவன பணியாள்கள் பழுதை நீக்க முன் வரவில்லை.  அவர் பாதி வழியிலேயே சாலையோரம் வண்டியை நிறுத்திவிட்டு மணி கணக்கில் காத்திருந்துள்ளார்.  நீண்ட நேரமாகியும் பணியாளர்கள் எவரும் வராததால்  வெறுப்புக்குள்ளாகி ஆத்திரமடைந்து  பெட்ரோல் வாங்கி பழுதாகி நின்ற தன்னுடைய புதிய வாகனத்தின் மீது அதனை ஊற்றி தீயிட்டு எரித்துள்ளார்.  

தீயிட்டு எரித்ததை வீடியோவாக சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்த தலால் வைரலானது .  இச்சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக மேல் பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story