தனியார் வங்கி மேலாளரை தாக்கி கொலை மிரட்டல்
சுய உதவிக்குழுவுக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளரை தாக்கி மிரட்டல் விடுத்த பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சுய உதவிக்குழுவுக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளரை தாக்கி மிரட்டல் விடுத்த பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வங்கி உதவி மேலாளர்
புதுவை முருங்கப்பாக்கம் ரங்கசாமி நகரில் தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கி கிளையின் உதவி மேலாளராக உபகாரம் (வயது 32) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த வங்கியில் முத்தியால்பேட்டை டி.வி.நகர் தாகூர் தோட்டம் பகுதியை சேர்ந்த ஷீலா மற்றும் அவரது தாயார் ஆரோக்கிய மேரி உள்ளிட்ட சிலர் மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்தனர்.
தாக்குதல்
நிர்வாக காரணங்களால் அவர்கள் விண்ணப்பித்த கடன் தொகை நிராகரிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த ஷீலா, அவரது தாயார் ஆரோக்கிய மேரி உள்ளிட்ட சிலர் வங்கிக்கு வந்து உதவி மேலாளர் உபகாரத்தை தரக்குறைவாக திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து முதலியார்பேட்டை போலீசில் உபகாரம் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story