விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாகூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பாகூர் தாலுகா அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய தொழிலாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். கொம்யூன் செயலாளர் ஹரிதாஸ் முன்னிலை வகித்தார். தமிழ் மாநில துணை தலைவர் சுப்பிரமணி, புதுச்சேரி பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். பிரதேச பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கொம்யூன் செயலாளர் சரவணன், முத்துலிங்கம் செல்வராசு, முருகையன், வளர்மதி, கிளை குழு உறுப்பினர்கள் சாம்பசிவம், தனுசு, சக்திவேல், பூங்காவனம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஆண்டிற்கு ரூ.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். சம்பளமாக நாளொன்றுக்கு ரூ.600 வழங்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஆண்டிற்கு 100 நாட்கள் வேலை வழங்கிட வேண்டும். விவசாயிகள் சங்கத்தை செயல் படுத்திட கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக, பாகூர் சிவன் கோவில் அருகில் இருந்து விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story