30 முட்டைகள் ரூ.70-க்கு விற்பனை
30 முட்டைகள் ரூ.70-க்கு விற்பனை விற்பனை செய்ப்பட்டதால் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கினர்.
கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் மீன்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் கோழி, இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு மாறியுள்ளனர். எனவே அவற்றின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் முட்டை விலை திடீரென்று குறைந்துள்ளது. திருக்கனூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு முட்டை தற்போது ரூ.4-க்கு விற்பனையாகிறது. இந்த நிலையில் சில வியாபாரிகள் நாமக்கல்லில் இருந்து அதிக அளவில் முட்டைகளை கொள்முதல் செய்து வாகனங்கள் மூலமாக திருக்கனூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். 30 முட்டைகள் கொண்ட ஒரு அட்டை ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைகளில் ஒரு முட்டை ரூ.4-க்கு விற்பனை செய்யும் நிலையில், வாகனங்களில் வரும் வியாபாரிகளிடம் ரூ.2.40-க்கு கிடைப்பதால் ரூ.70-க்கு 30 முட்டைகளை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்குகின்றனர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளதாலும், வடமாநிலங்களில் வெயிலின் தாக்கத்தால் முட்டை நுகர்வு குறைந்து உள்ளதாலும் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story