அயோத்தியா மண்டபம் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
அயோத்தியா மண்டபம் தொடர்பான வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை இன்று பிறப்பிப்பதாக சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
சென்னை,
சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீராம் சமாஜம் என்ற அமைப்பு சார்பில் அயோத்தியா மண்டபம் 1954-ம் ஆண்டு கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டது. இங்கு நிதி முறைகேடுகள் நடப்பதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அயோத்தியா மண்டபத்தை கடந்த 2013-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஸ்ரீராம் சமாஜம் சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த தனி நீதிபதி, இந்த வழக்கை இங்கு தொடர முடியாது. சம்பந்தப்பட்ட அமைப்பிடம் முறையிடலாம் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து கடந்த மாதம் உத்தரவிட்டார்.
பதில்மனு இல்லை
அதையடுத்து அயோத்தியா மண்டபம் நிர்வாகத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் கையில் எடுத்தனர். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஸ்ரீராம் சமாஜம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஸ்ரீராம் சமாஜம் சார்பில் ஆஜரான வக்கீல், ‘தனி நீதிபதி விசாரித்த வழக்கில் அரசுத்தரப்பில் பதில்மனுவே தாக்கல் செய்யவில்லை. பதில்மனு இல்லாமலேயே தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்’ என்று வாதிட்டார்.
தலையிட முடியாது
தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ‘ஸ்ரீராம் சமாஜம் நடத்தும் பள்ளி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதரீதியான நடவடிக்கைகள் நடந்ததால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பலவகைகளில் நிதி வசூலித்த இந்த அமைப்பு, அந்த வருவாய் விவரங்களை அரசுக்குத் தெரிவிக்கவில்லை’ என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘இந்தப் பிரச்சினையில் மாற்றுத்தீர்வு காண வழி உள்ளது எனக் கூறி பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ய முடியாது.
தனியார் அமைப்பான ஸ்ரீராம் சமாஜத்தின் நடவடிக்கைகளில் அரசு தலையிட முடியாது. மனுதாரர் அமைப்பு மீது குற்றம்சாட்டி அரசு அனுப்பிய நோட்டீசில் எந்த விவரமும் இல்லை’ என்று கருத்து தெரிவித்தனர்.
நடவடிக்கை எடுக்கலாம்
பின்னர், மனுதாரர் அமைப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக ஆதாரங்களுடன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி அரசு விசாரிக்கலாம். விசாரணையின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யப்போகிறோம்.
இதுகுறித்து இன்று (புதன்கிழமை) தீர்ப்பு பிறப்பிக்கப்படும்’ என்று நீதிபதிகள் அறிவித்து உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story