தஞ்சாவூர் அருகே நடந்த தேர்திருவிழாவில் சோகம்: மின்சாரம் பாய்ந்து 10 பேர் உயிரிழப்பு


தஞ்சாவூர் அருகே நடந்த தேர்திருவிழாவில் சோகம்: மின்சாரம் பாய்ந்து 10 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 26 April 2022 11:41 PM GMT (Updated: 2022-04-27T06:05:35+05:30)

தஞ்சாவூர் அருகே தேர்திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்ததில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தஞ்சாவூர், 

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம். 

இந்த சூழலில் களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, திருவிழா தேரோட்டம் நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் தஞ்சாவூர் பூதலூர் சாலையில் களிமேடு பகுதியில் வந்தபோது உயர் மின்அழுத்த கம்பி உரசியதில் தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் 10 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் இரண்டு 2 சிறுவர்கள் அடக்கம், மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து கள்ளபெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 நாள் நடைபெறும் குருபூஜை நிகழ்ச்சியில் முதல்நாளிலே இந்த பரிதாபமான சம்பவம் நிகழ்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story