கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரத்துடன் கருணாநிதி கலைமிகு சிலை நிறுவப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை கடலில் தூக்கி எறிந்தாலும், கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம், கவிழ்ந்து விடமாட்டேன். தமிழர்களே! தமிழர்களே! என்னை நீங்கள் நெருப்பில் தூக்கிப்போட்டாலும், அதிலே நான் விறகாகத்தான் வீழ்வேன், அடுப்பெரித்து நீங்கள் சமைத்து சாப்பிடலாம்.
தமிழர்களே, தமிழர்களே, நீங்கள் என்னை பாறையில் மோதினாலும், சிதறு தேங்காயாகத்தான் உடைவேன். நீங்கள் என்னை எடுத்துத் தின்று மகிழலாம் என்ற வைர வரிகளுக்கு சொந்தக்காரர் மட்டுமல்ல, தன்னுடைய வாழ்க்கையை அப்படியே வாழ்ந்து காட்டியவர்தான் கருணாநிதி.
அஞ்சுகச் செல்வர்; நம்மையெல்லாம் ஆளாக்கி விட்டு விட்டு, வங்க கடலோரம், தன் அன்பு அண்ணன் அருகே வாஞ்சைமிகு தென்றலின் தாலாட்டில் இருந்தபடி தமிழ்ச் சமுதாயத்தின் மகிழ்ச்சியைக் கண்ணுற்று வரும் கருணாநிதி, நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் உண்டென்றால், அவர் ஒருவர்தான்.
19 ஆண்டுகள் முதல்-அமைச்சர்
1957 முதல் 2016 வரை நடந்த தேர்தல்களில் எல்லாம் வென்றவர் அவர் மட்டும் தான். 1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சாவூர், 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் சைதாப்பேட்டை, 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் அண்ணாநகர், 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் துறைமுகம், 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் சேப்பாக்கம், 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் திருவாரூர் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றார்.
13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து, 60 ஆண்டுகள் இந்த மாமன்றத்தின் உறுப்பினராக இருந்தவர். 1984-ம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். தமிழ்நாட்டை 5 முறை ஆண்டவர் கருணாநிதி.
10-2-1969 அன்று முதன் முறையாக, 15-3-1971 அன்று 2-வது முறையாக, 27-1-1989 அன்று 3-வது முறையாக, 13-5-1996 அன்று 4-வது முறையாக, 13-5-2006 அன்று 5-வது முறையாக என 5 முறை இந்த நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று, 19 ஆண்டுகள் முதல்-அமைச்சராக இருந்தவர் கருணாநிதி.
நவீன தமிழகம்
5 முறை ஆட்சியில் இருந்த காலத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவாக்கியதுதான் இன்றைக்கு நாம் கண்ணுக்கு முன்னால் பார்க்கக்கூடிய நவீன தமிழகம். அன்னைத் தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதி, மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு உயர்வு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம். மகளிருக்கும் சொத்திலே பங்குண்டு என்ற சட்டம். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களுக்கான சமூகநீதி உரிமைகள்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி, சென்னை தரமணியில் டைடல் பார்க். சென்னைக்கு மெட்ரோ ரெயில் திட்டம், சிப்காட், சிட்கோ தொழில் வளாகங்கள் உருவாக்கம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கியது, நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டங்கள்.
திட்டங்கள்
அவசர ஆம்புலன்ஸ் 108 சேவை அறிமுகம், இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம், மினி பஸ்களைக் கொண்டு வந்தது, உழவர் சந்தைகள் அமைத்தது, கைம்பெண் மறுமண நிதி உதவி, கர்ப்பிணி பெண்களுக்கு உதவி ஆகிய திட்டங்கள், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, இலவச எரிவாயு இணைப்புடன்கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்குதல், மகளிர் சுயஉதவி குழுக்கள் அமைத்தல், அனைவரும் இணைந்து வாழ தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு.
உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலே இணைத்தது. நுழைவுத்தேர்வு ரத்து, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கியது, சேலம் உருக்காலை, சேலம் புதிய ரெயில்வே மண்டலம், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கக்கூடிய திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம், ஆசியாவிலேயே பெரிய அண்ணா நூலகம் ஆகியவை உருவாக்கம், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு மறுவாழ்வு வழங்குதல், ஏராளமான பல்கலைக்கழகங்கள், மருத்துவ கல்லூரிகள், கலை-அறிவியல் கல்லூரிகள் உருவாக்கியது.
தமிழகத்தின் அடையாளம்
இப்படி நான் சொல்லத்தொடங்கினால் நாள் முழுவதும் என்னால் சொல்லிக்கொண்டேயிருக்க முடியும். இவைதான் தமிழகத்தின் அடையாளங்கள் என்றால், அந்த அடையாளங்களை எல்லாம் உருவாக்கியவர் கருணாநிதி. தலைவர்களோடு தலைவர்களாக வாழ்ந்த தலைவர் தான் கருணாநிதி. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், காயிதே மில்லத், பாவேந்தர் பாரதிதாசன், பக்தவத்சலம், கி.ஆ.பெ.விசுவநாதன், எம்.ஜி.ஆர்., கவியரசு கண்ணதாசன், திருமுருக கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார்.
தமிழகத்தில் மட்டுமல்ல, பரந்து விரிந்த இந்த இந்திய அரசியலுக்கே வழிகாட்டியாக இருந்தவர் கருணாநிதி. ஜனாதிபதிகளாக இருந்த நீலம் சஞ்சீவிரெட்டி, கியானி ஜெயில்சிங், வி.வி.கிரி, சங்கர் தயாள் சர்மா, ஆர்.வெங்கட்ராமன், கே.ஆர்.நாராயணன், ஏ.பி.ஜெ. அப்துல்கலாம், பிரதிபா பாட்டீல் ஆகியோரால் பாராட்டப்பட்டவர். பிரதமர் களாக இருந்த இந்திராகாந்தி, சரண்சிங், வி.பி.சிங், தேவேகவுடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோரால் போற்றப்பட்டவர்.
வரலாற்று கடமை
நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத கருணாநிதி மறைவிற்குத்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டன. இப்படி எல்லைகளைத் தாண்டி எல்லோரையும் வசப்படுத்தியவர் கருணாநிதி. படைப்பாளிகளோடு போட்டியிடும் படைப்பாளி. கவிஞர்களில் தலைசிறந்த கவிச்சக்கரவர்த்தி. திரையுலகத்தினரில் மூத்த கலையுலகவாதி. அரசியல் உலகில் தலைசிறந்த அரசியல் ஆளுமை. நிர்வாகத்திறனில் நுணுக்கமான திறமைசாலி. மேடை ஏறினால் வெல்லும் சொல்லுக்கு அவர்தான் சொந்தக்காரர். அவையில் ஏறினால் அவர்தான் வெற்றிச் சூத்திரம் அறிந்தவர் என எல்லாவற்றிலும் முதல்வராக வாழ்ந்த முதல்வர் அவர்.
‘என்னிடம் இருந்து செங்கோலைப் பறிக்கலாம், எழுதுகோலைப் பறிக்க முடியாது' என்று அவர் சொல்லிக் கொண்டார். செங்கோல் பறிக்கப்பட்டாலும், செங்கோலை வழிநடத்தும் எழுதுகோலை அவர்தான் வைத்திருந்தார். அரசு என்பது பதவி பிரமாணம் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ள முடியாமல் போனாலும், அவரிடம்தான் இருந்தது. அரசும், அரசியலும் அவரை இயக்கின. அரசையும், அரசியலையும் அவரே இயக்கினார். இத்தகைய அரசு இயலின், அரசியலின் மாபெரும் தலைவருக்கு இந்த அரசு தனது வரலாற்று கடமையைச் செய்ய நினைக்கிறது.
அரசு விழாவாக கொண்டாட்டம்
திருவாரூரில் முத்துவேலர்-அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக கருணாநிதி பிறந்த தினமான ஜூன் 3-ந் தேதி, அரசு விழாவாக இனி கொண்டாடப்படும் என்பதை இம்மாமன்றத்தில் நெஞ்சில் விம்மக்கூடிய மகிழ்ச்சியால், இதயத்தில் துடிக்கக்கூடிய எழுச்சியால், சிந்தை அணுக்களில் வெளிப்படும் நன்றி உணர்வால் நான் இதை இந்த அவைக்கு அறிவிக்கிறேன். வரும் ஜூன் 3-ந் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரத்துடன் கருணாநிதி கலைமிகு சிலை நிறுவப்படும்.
‘நீண்ட தூரம் ஓடினால் தான் அதிக உயரம் தாண்ட முடியும்’ என்று அடிக்கடி சொல்வார் தலைவர். நீண்ட தூரம் இந்த தமிழினத்துக்காக ஓடியவர் கருணாநிதி. அவரை அதிக அதிக உயரத்தில் உயர்த்தி பார்ப்பதை தனது கடமையாக கருதுகிறது தமிழ்நாடு அரசு.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி முடித்ததும், அவை முன்னவர் துரைமுருகன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கைகொடுத்து நன்றியும், வாழ்த்தும் தெரிவித்தார்.

Related Tags :
Next Story