தமிழகத்தில் நடப்பது ஆன்மீக அரசுதான் - தருமபுரம் ஆதீனம்
தமிழகத்தில் நடப்பது ஆன்மீக அரசுதான் என்று தருமபுரம் ஆதீனம் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் உள்ள ஆதீனங்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். தருமபுரம் ஆதீனம், காஞ்சிபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், குன்றக்குடி அடிகளார், சூரியநாராயண ஆதீனம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
இந்த ஆலோனையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார். வருகிற மே மாதம் 5-ந்தேதி அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்க உள்ள நிலையில் முதல் அமைச்சர் இந்த ஆலோசனை நடத்தி உள்ளார்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரம் ஆதீனம், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறைய கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் தமிழகத்தில் நடைபெறுவது ஆன்மீக அரசு என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த தருமபுரம் ஆதீனம், தமிழகத்தில் நடப்பது ஆன்மீக அரசுதான் என்று கூறினார். அரசு தனது கொள்கையை கவனித்து கொள்வது போல நாங்கள் எங்களது கொள்கையை பார்க்கிறோம். எங்கள் கொள்கையில் அரசு தலையிடுவதில்லை. ஆதீனங்களுக்கு என்று தனியாக சட்ட திட்டங்கள் உள்ளன என்று கூறினார்.
Related Tags :
Next Story