2 நாள் பயணமாக பங்ளாதேஷ் மற்றும் பூட்டானுக்குச் செல்கிறார் ஜெய்சங்கர்


2 நாள் பயணமாக  பங்ளாதேஷ் மற்றும் பூட்டானுக்குச் செல்கிறார்  ஜெய்சங்கர்
x
தினத்தந்தி 27 April 2022 3:34 PM IST (Updated: 27 April 2022 3:34 PM IST)
t-max-icont-min-icon

2 நாள் பயணமாக பங்ளாதேஷ் மற்றும் பூட்டானுக்குச் செல்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 28, 29 தேதிகளில்  பங்ளாதேஷ் மற்றும் பூட்டான் நாடுகளுக்குச் செல்கிறார். அங்கு இரு நாட்டுத் தலைவர்களைச் சந்திக்க உள்ளார்.

 பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா உடனான சந்திப்பில் இந்தியா - வங்கதேச உறவுநிலை குறித்தும் இருதரப்பு புரிந்துணர்வு நிலை குறித்து விவாதிக்கப்படும் என்றும் அதற்கடுத்து பூட்டான் பிரதமர் லோடே ஷெரிங்கை ஜெஸ்சங்கர் சந்திப்பார் எனவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story