அயோத்தியா மண்டப வழக்கு: அறநிலையத்துறை உத்தரவு ரத்து - சென்னை ஐகோர்ட்டு
அயோத்தியா மண்டபத்தை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில் தக்காரை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
சென்னை,
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை அரசு கையகப்படுத்திய உத்தரவை எதிா்த்து மண்டபத்தின் நிா்வாக அமைப்பான ஸ்ரீராம் சமாஜ் தொடுத்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் கூறுகையில்,
தனியாா் அமைப்பான ஸ்ரீராம் சமாஜத்தின் நடவடிக்கைகளில் அரசு தலையிட முடியாது. அமைப்பு மீது குற்றம்சாட்டி அரசு அனுப்பிய நோட்டீசில் எந்த விவரமும் இல்லை. அமைப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக ஆதாரங்களுடன் விளக்கம் கேட்டு அரசு விசாரிக்கலாம். விசாரணையின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யப் போகிறோம். இதுகுறித்து புதன்கிழமை தீா்ப்பு பிறப்பிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்தநிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்,
அயோத்தியா மண்டபத்தை நிர்வகிக்க அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சங்கம் என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்ட ஸ்ரீராம் சமாஜத்தை கோவில் என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியாது. முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி அறநிலையத்துறை புதிய உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம்.
கோவிலை நிர்வகிக்க அறநிலையத்துறை அதிகாரியை நியமித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. அனைத்து தரப்பு விளக்கத்தை கேட்டபின் சட்டத்திற்கு உட்பட்டு புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். புதிதாக விசாரணையை தொடங்கி சட்டத்திற்கு உட்பட்டு அறநிலையத்துறை உத்தரவுப்பிறப்பிக்கலாம்.
சிலைகளை வைத்து பக்தர்களை பூஜிக்க வைத்து தட்சணை பெறுவதை அறநிலையத்துறை நிரூபிக்கவில்லை. சங்கங்களின் கீழ் பதிவு செய்த ஸ்ரீராம் சமாஜை கோவில் என்ற வரையரைக்குள் கொண்டு வர முடியாது என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story