சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஐ.ஐ.டி. வளாகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை,
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இதுவரை 4,974 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதில் 2,729 மாதிரிகளின் முடிவுகள் தெரியவந்துள்ளன. இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டி. இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஐ.ஐ.டி. வளாகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் சென்னை ஐ.ஐ.டி.யில் இதுவரை உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story