தமிழகம் முழுவதும் 122 நீதிபதிகள் இடமாற்றம்..!


தமிழகம் முழுவதும் 122 நீதிபதிகள் இடமாற்றம்..!
x
தினத்தந்தி 27 April 2022 8:23 PM IST (Updated: 27 April 2022 8:23 PM IST)
t-max-icont-min-icon

மாவட்ட மற்றும் சிறப்பு கோர்ட்டு நீதிபதிகள், மாஜிஸ்திரேட், தீர்ப்பாய உறுப்பினர்கள் என மொத்தம் 122 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


சென்னை, 

தமிழகம் முழுவதும் மாவட்ட மற்றும் சிறப்பு கோர்ட்டு நீதிபதிகள், மாஜிஸ்திரேட், தீர்ப்பாய உறுப்பினர்கள் என மொத்தம் 122 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் உள்ள 122 நீதிபதிகளை இடமாற்றம் செய்து ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், சுமார் 1½ ஆண்டுகளாக கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த ஊட்டி கோர்ட்டு நீதிபதி சி.சஞ்சய்பாபா, தேனி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் இன்று, சென்னை ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை நகர உரிமையியல் கோர்ட்டு முதலாவது உதவி நீதிபதி மணிமேகலை, சென்னை நகர உரிமையியல் கோர்ட்டு 2 வது உதவி நீதிபதியாகவும்; சென்னை நகர உரிமையியல் கோர்ட்டு 5 வது உதவி நீதிபதி கயல்விழி, காஞ்சிபுரம் முதன்மை துணை நீதிபதியாகவும் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், கன்னியாகுமரி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் நீதிபதிகள், சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள், மாஜிஸ்திரேட்கள், தீர்ப்பாய உறுப்பினர் என மொத்தம் 122 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, தலைமைப் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று எழும்பூர் மோசடி வழக்குகளை விசாரிக்கும் மாஜிஸ்திரேட் நாகராஜன், எழும்பூர் 19 வது மாஜிஸ்திரேட்டாகவும்; ஜார்ஜ் டவுண் 3 வது மாஜிஸ்திரேட் தாவூத் அம்மாள், ஆரணி துணை நீதிபதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சைதாப்பேட்டை 4 வது பெருநகர மாஜிஸ்திரேட் சுப்ரஜா, செங்கல்பட்டு முதன்மை துணை நீதிபதியாகவும்; சென்னை நகர உரிமையியல் கோர்ட்டு 6 வது உதவி நீதிபதி பிரபாகரன், குடியாத்தம் துணை நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Next Story