அதிக விலைக்கு மதுபானம் விற்றால் உரிமம் ரத்து


அதிக விலைக்கு மதுபானம் விற்றால் உரிமம் ரத்து
x

மதுபானங்களை அதிக விலைக்கு விற்றால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலால்துறை துணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுபானங்களை அதிக விலைக்கு விற்றால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலால்துறை துணை ஆணையர் சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுவை   கலால்துறை துணை ஆணையர் சுதாகர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்கள் புகார்
புதுவையில் உள்ள மதுபான கடைகளில் மதுபானங்களை அதிகபட்ச விற்பனை விலைக்கும் அதிகமாக விற்பதாக பொதுமக்களிடம் இருந்து கலால்துறைக்கு புகார்கள் வருகின்றன. இவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்வது கலால் விதிகளை மீறியதாகும். இதுபோன்ற குற்ற செயல்களுக்கு லைசென்சு (உரிமம்) பெற்றவர்களே    பொறுப்பேற்க வேண்டும்.     எனவே    மது பானக்கடை  உரிமம்  பெற்றவர்கள்     தங்களது ஊழியர் களுக்கு கலால்துறை நிர்ணயம் செய்துள்ள அதிகபட்ச விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்   என்று அறிவுறுத்த வேண்டும்.
உரிமம் ரத்து
மேலும் கலால்துறையால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மதுபானங்கள்   விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். விதிகளை பின்பற்ற தவறினாலோ மதுபானங்களை   கூடுதல் விலைக்கு விற்றாலோ உரிமம் இடைநீக்கமோ,    ரத்தோ செய்யப்படும்.
இவ்வாறு துணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

Next Story