ரூ.1.84 லட்சம் செலவில் தார் சாலை


ரூ.1.84 லட்சம் செலவில் தார் சாலை
x
தினத்தந்தி 27 April 2022 11:03 PM IST (Updated: 27 April 2022 11:03 PM IST)
t-max-icont-min-icon

வீராம்பட்டினத்தில் ரூ.1.84 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் சாய் சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட வீராம்பட்டினம் துறைமுக சாலை, நாகூரான் தோட்டம் சாலை, சின்ன வீராம்பட்டினம் சாலை மற்றும் அரிக்கமேடு    சாலைகள்  ரூ.1.84 லட்சத்தில் மேம்படுத்தப்படுகிறது. இதற்கான பூமி பூஜைக்கு தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் தலைமை தாங்கினார். அமைச்சர் சாய் சரவணன்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை செயற்பொறியாளர் திருநாவுக்கரசு,  கொம்யூன் பஞ்சாயத்து  ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர்கள் சுரேஷ், அகிலன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story