செல்போன் பறித்த ஓட்டல் ஊழியர்கள் 2 பேர் கைது
சாலையில் நடந்து சென்ற வாலிபரை தாக்கி செல்போன்கள் பறித்த ஓட்டல் ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலையில் நடந்து சென்ற வாலிபரை தாக்கி செல்போன்கள் பறித்த ஓட்டல் ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் பறிப்பு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா காமராஜ் நகரை சேர்ந்தவர் ராமர் (வயது 32). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கு கடைகளில் மொத்த ஆர்டர் எடுக்கும் ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். புதுவையில் உள்ள கடைகளில் ஆர்டர் எடுப்பதற்காக ராமர் வந்திருந்தார். அவர் அண்ணாசாலையில் ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். நேற்று ரங்கப்பிள்ளை வீதியில் இரவு உணவு சாப்பிட்டு விட்டு விடுதிக்கு ராமர் நடந்து சென்றார். காந்தி வீதி, ரங்கபிள்ளை வீதி சந்திப்பில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் அவரை வழிமறித்து தாக்கி, அவரிடமிருந்த 2 செல்போன்களையும் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
2 பேர் கைது
இதுகுறித்த புகாரின்பேரில் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்துச்சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தினார்கள்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்கள் புதுவையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வரும் கூடப்பாக்கத்தை சேர்ந்த அரசு (20), காரைக்காலை சேர்ந்த ஜான்சன் (32) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அரசு, ஜான்சன் ஆகியோரை அவர்கள் வேலை செய்யும் ஓட்டலில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட அரசு, ஜான்சன் ஆகியோர் வேறு யாரிடமும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்களா? எனவும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story