தீ விபத்துக்கு மின்கசிவே காரணம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தீ விபத்துக்கு மின்கசிவே காரணம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
சென்னை,
தீ விபத்து நடந்த சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியை, நேரில் பார்வையிட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீயணைப்பு துறையின் சார்பில், ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது எதிர்பாராதவிதமாக மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்து. இந்த விபத்து ஏற்பட்ட உடனே உயிர் சேதத்தை தவிர்க்க ஊழியர்கள் உடனடியாக நோயாளிகளை அப்புறப்படுத்தியுள்ளனர். அனைவரையும் தூக்கிக்கொண்டே வெளியே வந்துள்ளனர்.
ஆஸ்பத்திரி கட்டிடங்கள் அனைத்தும் சரியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 3 தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகள் உள்பட 33 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
மேலும், அங்குள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களையும் வெளியே மீட்டுள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
தீ விபத்துக்குள்ளான கட்டிடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தவுடன், எவ்வளவு சேதம் என்பது தெரியவரும். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் இல்லை. 5 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Related Tags :
Next Story