தேர் திருவிழாவில் விபத்து: உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்


தேர் திருவிழாவில் விபத்து: உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்
x
தினத்தந்தி 28 April 2022 5:29 AM IST (Updated: 28 April 2022 5:29 AM IST)
t-max-icont-min-icon

தேர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு, தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில், இன்று (நேற்று) அதிகாலை நடைபெற்ற தேர் திருவிழாவில் எதிர்பாராதவிதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில், 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர் என்ற துயரமான செய்தியை கேள்வியுற்று மிகுந்த வேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தலா ரூ.5 லட்சம் நிதி உதவி

இந்த விபத்தில் 15 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாக அறிகிறேன். அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும், விபத்து பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், மாவட்ட நிர்வாகத்துக்கும், போலீஸ் துறைக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா ரூ.5 லட்சம் உடனடியாக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story