பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் சொத்துக்களை ஆய்வு செய்ய ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு..!


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 28 April 2022 10:34 AM IST (Updated: 28 April 2022 10:34 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் சொத்துக்களை ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டையைச் சேர்ந்த டேவிட் லியோ என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் ஐகோர்ட்டு மதுரைக்கிளை அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. 

அதன்படி பள்ளிக் கல்வித்துறையின் குரூப் 'ஏ' மற்றும் குரூப் 'பி' அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அதிகாரிகள் மீதான முறைகேடுகள் உறுதிசெய்யப்பட்டால், விதிகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

மேலும் பள்ளிக் கல்வித்துறையில் நடைபெறும் ஊழல் குறித்து விசாரிக்க போதுமான அளவு போலீசாரை ஒதுக்க தமிழக டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Next Story