நேர்முக தேர்வை ஒத்திவைத்ததால் திடீர் சாலை மறியல் - ஜோலார்பேட்டையில் போக்குவரத்து பாதிப்பு...!
ஜோலார்பேட்டை அருகே நேர்முக தேர்வை ஒத்திவைத்ததால் விண்ணப்பதாரர்கள் சாலை மறியல் போராட்டம்.
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவர் உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு கடந்த 26-ம் தேதி முதல் வருகிற 30-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் 19 கால்நடை மருத்துவர் உதவியாளர் பணிக்கு மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்து 100 நபர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
இதனையடுத்து 26 மற்றும் 27-ம் தேதி வரை நேர்முக தேர்வு நடைப்பெற்ற நிலையில் இன்று கால்நடை துறை அதிகாரிகள் தற்காலிகமாக நேர்முக தேர்வு நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவித்ததாக கூறப்படுகின்றது.
ஆனால் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்ப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள இன்று காலை முதலே வந்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் திடீரென நேர்முக தேர்வு நிறுத்தப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த விண்ணப்பதாரர்கள் திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி செல்லும் சாலையை மறியத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்தை நடத்தினர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story